கோவை அரசு மருத்துவமனைக்கு இரத்த தானம் வழங்கும் முகாம் - திமுக செயலாளர் நா.கார்த்திக் அறிவிப்பு

கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, வருகிற 22ம் தேதி கோவை வரதராஜபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ள சாய் விவாகா மகால் திருமண மண்டபத்தில், தளபதி இரத்ததான இயக்கத்தின் சார்பில், கோவை அரசு மருத்துவமனைக்கு இரத்த தானம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளதாக திமுக செயலாளர் நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.


கோவை: முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, வருகிற 22-6-2024, சனிக்கிழமை காலை 8.00 மணியளவில், கோவை வரதராஜபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ள சாய் விவாகா மகால் திருமண மண்டபத்தில், தளபதி இரத்ததான இயக்கத்தின் சார்பில், கோவை அரசு மருத்துவமனைக்கு இரத்த தானம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில், கோவை மாநகர் மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட அனைத்துக் கழக நிர்வாகிகள், அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள், இளைஞர்கள், இளம்பெண்கள், தன்னார்வலர்கள், கழக உடன்பிறப்புக்கள், கழக செயல்வீரர்கள், கழக தொண்டர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தனது முகநூல் பக்கத்தில் இன்று (ஜூன்.20) பதிவிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...