கோவை மாநகராட்சி பள்ளிகளின் தர மேம்பாட்டிற்கான புதுமையான திட்டங்கள் குறித்து ஆலோசனை கூட்டம்

கோவை மாநகராட்சி கல்வி குழு தலைவர் மாலதி தலைமையில் இன்று புதிய திட்டங்களும், பள்ளிகளின் தர மேம்பாட்டை உயர்த்தும் நோக்கிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி அரசு பள்ளிகளுக்கு நிறைவேற்ற பட உள்ள புதிய திட்டங்கள் மற்றும் பள்ளிகளின் தர மேம்பாட்டை உயர்த்துவது தொடர்பாக கோவை மாநகராட்சி கல்வி குழு தலைவர் மாலதி தலைமையில் ஆலோசணை கூட்டம் மாநகராட்சி வளாக அரங்கில் இன்று (ஜூன்.20) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநாகராட்சி பொறியாளர்கள், மண்டல அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோர். கலந்து கொண்டனர். 



இதில், மாநகராட்சி அனைத்துப் பள்ளிகளுக்கும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்த ஏற்கனவே நடந்த குழுக் கூட்டத்தில் ஆணையர் அறிவுறுத்திய நிலையில், தற்போது. மாணாக்கர்களின் நலன்கருதி உடனடியாக செயல்படுத்தவும், அனைத்துப் பள்ளிகளுக்கும் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடப்பட்டது.



மேலும் நடந்து முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் குறித்தும், கல்வியாண்டு தொடக்கத்திலேயே கற்றல் கையேடு வழங்குதல், மாநகராட்சிப் பள்ளிகளில் கழப்பறை வசதிகள்,கட்டிடம் மற்றும் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது. 

மேலும் பல்வேறு பள்ளிகளில் மைதானத்தை சீரமைப்பது, சேதமடைந்த சுற்றுச்சுவர்களை சரி பார்ப்பது, உயர் நிலை, மேல் நிலை பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பது என பல்வேறு பணிகள் நடைபெறாமல் இருப்பதை சுட்டி காட்டிய கல்வி குழுவினர் உடனடியாக இந்த பணிகளை செயல்படுத்த முன்வர வேண்டும் என கூறினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...