கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர் மழையால் உயர்வு

கோவை சிறுவாணி அணையில் நீர்மட்டம் கூடுதலாக 9.45 அடியாக உயர்ந்துள்ளது; தென்மேற்கு பருவமழையினால் நீர்வரத்து அதிகரிப்பு.


கோவை: கோவை மாநகரில் 26 வாா்டுகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட நகரையொட்டியுள்ள கிராமங்களுக்கு சிறுவாணி குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஐனவரி, பிப்ரவரி மாதங்களில் 20 அடிக்கும் அதிகமாக இருந்த சிறுவாணி அணையின் நீா்மட்டம், கடும் வெயில் காரணமாக மாா்ச், ஏப்ரல் மாதங்களில் 8 அடிக்கும் குறைவாக சரிந்தது. இந்நிலையில், கடந்த மே மாதத்தில் பெய்த தொடா்மழையால், அணையின் நீா்மட்டம் 10 அடிக்கும் மேல் உயா்ந்தது. அதன் பிறகு, மழை இல்லாததால், அணையின் நீா்மட்டம் மீண்டும் 9 அடிக்கும் கீழ் குறைந்தது. 

இந்நிலையில், கேரளப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்து வரும் நிலையில், சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதி மற்றும் அடிவாரப் பகுதிகளில் இடைவெளிவிட்டு மழை பெய்துவருவதால் அணைக்கு செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. அதன்படி ஜூன்.20 நிலவரப்படி சிறுவாணி நீா்மட்டம் 9.45 அடியாக உள்ளது என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...