நான் சாதி வெறியன் தான் – கோவையில் நடிகர் ரஞ்சித் விளக்கம்

நாடக காதல் என்று சொல்லும் போது மட்டும் என்னை சாதி வெறியனாக பார்க்கிறார்கள். நாடக காதலை எதிர்ப்பதால் நான் சாதி வெறியன் என்றால் ஆம் நான் சாதி வெறியன் தான் என்று நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.



கோவை: பிரபல நடிகர் கொங்கு ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் கோவை கோனியம்மன் திருக்கோவிலில் திரைப்படத்தின் போஸ்டரை வைத்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஞ்சித், கவுண்டம்பாளையம் திரைப்படம் வருகிற ஜூலை 5ம் தேதி வெளியாக உள்ளது. சுமார் 200 திரையரங்குகளில் படம் திரையிடப்பட உள்ளது.



நாடக காதலை மையப்படுத்தி விழிப்புணர்வு படமாக தான் இயக்கியும், நடித்தும் உள்ளதாகவும் கோவை பகுதியை சுற்றி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நாடகக் காதலில் பாதிக்கப்பட்ட குடும்ப பெண்களின் கண்ணீரை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டதாகவும், பணக்கார பிள்ளைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் நாடக காதல் தான் இது எனவும் குறிப்பிட்டார். இன்றைய காலகட்டத்தில் வரதட்சணை, கொலை, தற்கொலை போன்றவை நடைபெற்று வருவதாகவும், சுயமரியாதை திருமணம் என சொல்லி எவ்வளவு கொடுமை நெல்லையில் நடந்துள்ளது என சுட்டிக்காட்டியதுடன், சுயமரியாதை திருமணங்களை நிறுத்த வேண்டும் எனவும், சமூக நீதி பேசினால் எனக்கு கடும் கோபம் வரும் என்றும் தெரிவித்தார்.



மேலும் சுயமரியாதை, சமூக நீதி பேசுபவர்கள் முதலில் அவர்களின் குடும்பத்தில் இருக்கும் பெண்ணிற்கு சுயமரியாதை திருமணம் செய்து வைத்துவிட்டு மற்ற பெண்களுக்கு பண்ண சொல்லுங்க எனவும், ஆனால் அவர்கள் பண்ண மாட்டார்கள் எனவும் கூறினார். பெற்றோர் இல்லாமல் திருமணம் நடக்க கூடாது என அப்படி சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், பெற்றவர்கள் தான் உயர்ந்த சாதி பெற்றவர்களை பிரித்து கல்யாணம் நடத்தி வைப்பதற்கு பதில் அவர்களுடன் சேர்த்து வைத்து அவர்களின் சம்மதத்துடன் நடத்தி வைக்கலாமே எனவும் ஆலோசனை வழங்கினார்.

நாடக காதல் என்று சொல்லும் போது மட்டும் என்னை சாதி வெறியனாக பார்க்கிறார்கள். நாடக காதலை எதிர்ப்பதால் நான் சாதி வெறியன் என்றால் ஆம் நான் சாதி வெறியன் தான் எனவும் சாடினார். மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள மாட்டிறைச்சி வசனம் குறித்த கேள்விக்கு, நாய், பன்றி, காக்கா, பொங்கல் உள்ளதா? மாடுகள் தெய்வமாகவும், விவசாயத்திற்கு காலம் காலமாக பக்கபலமாக உள்ளது என்பதில் தான் மாடுப்பொங்கலுக்கு அரசு விடுமுறை அளித்து கொண்டாடுகிறோம். எனவே மாட்டை தெய்வமாக வழிபடுவதால் அது தொடர்பான வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறினார். இதேப்போல் என் படத்தின் மீது யாருக்கெல்லாம் கோபம் வருகிறதோ, அவர்களும் நாடக காதலை ஆதரிப்பவர்கள் என்றார். தனக்கு அரசியல் கட்சி ஆரம்பிக்க திட்டமில்லை, சேரவும் திட்டமில்லை என்ற அவர், கள்ளச்சாராயம் விற்பவர்கள் தனக்கான இருக்கையை பிடித்து சட்டமன்றத்தில் அமர்ந்துள்ளனர் எனவும், கடன் வாங்கி நடத்தும் ஆட்சி நல்ல ஆட்சியா? எனவும் கேள்வி எழுப்பினர்.

நாளைய தலைமுறையை காப்பாற்ற அரசியல் மாற்றம் வேண்டும் என வலியுறுத்திய நடிகர் ரஞ்சித், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சட்டமன்ற தேர்தலை அடிப்படையாக வைத்து தான் அரசியல் கட்சியினர் போட்டி போட்டு பணம் கொடுக்கின்றனர். விவசாய தற்கொலைகளுக்கு ஏன் அரசு நிவாரணம் கொடுக்கவில்லை எனவும் விமர்சித்தார். சாலைகளில் திரும்பும் இடங்களில் எல்லாம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்லோ பாய்சன் அது என்றும், அதை பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை என்றும் ஆதங்கப்பட்டார்.

மேலும் கள்ளச்சாராயத்தை ஆட்சியாளர்களால் ஒழிக்க முடியாது எனவும், பிளாஸ்டிக்க்கையே இவர்களால் ஒழிக்க முடியாத போது, எப்படி கள்ளசாராயத்தை ஒழிப்பார்கள் என கேள்வி எழுப்பினார். அரசியல் மிகப்பெரிய வியாபாரம் எனவும், எனவே அதில் அரசியல் கடைகள் (கட்சி) உள்ளது புதிய கடைகளும் (கட்சி) திறக்கப்படவுள்ளது. நல்ல அரசியல் கட்சி வர வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவோம் என்பது ஏற்று கொள்ள இயலாது. ஒரே முயற்சியாக மது விலக்கை கொண்டு வர வேண்டும் என்றும் கூறிய அவர், கள்ளுகடையை திறக்க வேண்டும் எனவும், கள்ளுகடையில் வருமானம் இல்லாத காரணத்தினால்தான் இவர்கள் விரும்புவதில்லை, மதுவில் வரும் வருமானத்தில்தான் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது என்றார்.  

200 திரையரங்குகளில் படம் வெளியாகிறது. இதேபோல் இந்த கவுண்டம்பாளையம் படத்திற்கு A சான்றிதழ் வழங்கியிருப்பதாகவும், அதற்காக இந்த படத்தில் ஆபாச காட்சிகள் இருப்பதாக நினைக்க வேண்டாம், நாடக காதல் குறித்த ஆழ்ந்த கருத்துகள் இருப்பதால் இந்த சான்றிதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...