கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

இந்த ஆண்டு முதுநிலைப் படிப்புகளுக்கு மொத்தம் 2330 விண்ணப்பதாரர்களும், முனைவர் பட்டப் படிப்புகளுக்கு 380 மாணவர்களும் தங்களின் பாட விருப்பத்தின்படி பல்வேறு திட்டங்களுக்கு விண்ணப்பித்து இன்று நடைபெற்ற முதுகலை நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முதுகலை பட்ட மேற்படிப்பு பயிலகம் 11 தொகுப்பு கல்லூரிகளில் 33 முதுகலை மற்றும் 28 முனைவர் பட்டப் படிப்பை வழங்குகிறது. துணைவேந்தர் கீதாலட்சுமி மே 7, 2024 அன்று வேளாண்மை, தோட்டக்கலை. வேளாண் பொறியியல், வனவியல் மற்றும் சமூக அறிவியல் சேர்க்கைக்கான இணையதளத்தினை தொடங்கினார்.

இந்த ஆண்டு முதுநிலைப் படிப்புகளுக்கு மொத்தம் 2330 விண்ணப்பதாரர்களும், முனைவர் பட்டப் படிப்புகளுக்கு 380 மாணவர்களும் தங்களின் பாட விருப்பத்தின்படி பல்வேறு திட்டங்களுக்கு விண்ணப்பித்து 23 ஜூன் 2024 அன்று நடைபெற்ற முதுகலை நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டனர். 



இந்த நுழைவுத் தேர்வில் ஆத்திரப் பிரதேசம், கேரண, ஈர்நாடகா, மகாராஷ்ட்ரா, ஒடிசா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம், மேகாலயா, அசாம், தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்த தேர்வு பல்கலைக்கழகத்தின் 33 தேர்வு அரங்குகள் மற்றும் விரிவுரை அரங்குகளில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் 50 நிர்வாக பணியாளர்கள் மூலம் நடத்தப்பட்டது. தேர்வு நடைபெறும் பல்வேறு அரங்குகளைக் கண்டறிய கூகுள் வரைபடத்துடன் இணைக்கப்பட்ட QR குறியீடுகள், உருவாக்கப்பட்டு

காட்டப்பட்டிருந்தது.

மேற்கண்ட தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கான சேர்க்கை வரும் செப்டம்பர் 2024 இல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...