கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற முதியவரால் பரபரப்பு

32 ஏக்கர் நிலத்தை தனது மகன், அவரது மாமனாரும், திமுக அவை தலைவருமான அழகப்பன் உடன் சேர்ந்து அபரிக்க முயல்வதாக கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணைய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற முதியவரால் பரபரப்பு நிலவியது.



கோவை: கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தாலுக்கா காணியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. 72 வயதான இவருக்கு காணியம்பாளையம் மற்றும் வகுத்தம்பாளையம் கிராமத்தில் சுமார் 32 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. அதில் 23 ஏக்கர் நிலம் இவரது மகன் கிருஷ்ணராஜ் பெயரில் இருப்பதாக தெரிகிறது.மீதமுள்ள சுமார் 8 ஏக்கர் நிலத்தில் குப்புசாமி விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மனைவி இறந்துவிட்ட நிலையில் குப்புசாமி, மகள் மற்றும் மருமகனுடன் பொள்ளாச்சி நெகமம் பகுதியில் வசித்து வருகிறார்.



கிருஷ்ணராஜனின் மாமனார் அழகப்பன் திமுக கட்சியில் நகர அவை தலைவர் பொறுப்பு வகித்து வரும் நிலையில், குப்புசாமியின் அனைத்து சொத்தையும் கிருஷ்ணராஜ் அவரது மாமனார் அழகப்பனுடன் இணைந்து அபகரிக்க முயற்சிப்பதாகவும், அனைத்து சொத்துக்களும் வேண்டுமென தன்னையும், தனது மகள் மற்றும் மகளின் கணவரை அந்த இடத்திலிருந்து துரத்திவிட்டு தற்பொழுது அந்த இடத்திற்குள் நுழைய விடாமல் செய்வதாகவும், கொலை மிரட்டல் விடுவதாகவும் குற்றம் சாட்டிய குப்புசாமி அவரது மருமகனுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஜூன்.24 மனு அளிக்க வந்தார்.

மனு அளிக்க வந்த குப்புசாமி திடீரென மண்ணெணையை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர் மீது தண்ணீர் ஊற்றி தற்கொலையை தடுத்து நிறுத்தி அவரை சமாதானப்படுத்தினர்.

அப்போது தன்னை விட்டு விடுங்கள் நான் இறந்து விடுகிறேன், திமுக அவை தலைவர் அழகப்பனால் நான் இறந்து விட போகிறேன் என்று கூச்சலிட்டார். பின்னர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானப்படுத்தி ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நடைபெற்ற இந்த தற்கொலை முயற்சி சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...