சி.பி.ஐ. விசாரணை கோரி கவர்னர் ஆர்.என்.ரவியிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மனு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரை செய்யவேண்டும் என கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து தமிழக பாஜக தலைவர் அண்ணமலை மனு அளித்துள்ளார்.


கோவை: கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 20ந்தேதி கள்ளச்சாராயம் குடித்த விவகாரத்தில் இதுவரை 58 பேர் உயிரிழந்து உள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிர்ப்பலி இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தமிழகம் மட்டும் இன்றி இந்திய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர்.

ஆனால், முதல்வர் ஸ்டாலின் இதுவரை கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை. கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும் தாய், தந்தையை இழந்த குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யப்படும். அவர்களது கல்வி செலவை அரசே ஏற்கும் என்றும் அறிவித்தார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதி இருப்பதாக தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை ஏற்கனவே கூறி இருந்தார்.

இந்நிலையில் அண்ணாமலை இன்று ஜூன்.24 தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை அவரது மாளிகையில் சந்தித்தார். அப்போது அவருடன் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பாஜக மூத்த தலைவர்கள் முன்னணி பிரமுகர்களும் சென்று இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது அண்ணாமலை ஆளுனர் ரவியிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவதற்கு பரிந்துரை செய்யவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு மாநில மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.

மதுவிலக்கு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம் என்று அண்ணாமலை சமூக ஊடக தளமான எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Newsletter

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...