குடிநீர் வழங்கக்கோரி பல்லடம் தாராபுரம் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்


திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிபாளையம் பஞ்சாயத்தைச் சேர்ந்த சுமார் 150 மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படாததால் இன்று காலை பல்லடம் தாராபுரம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காததாலும் குடிநீர் சப்ளை 18 நாட்கள் ஒரு முறை வருவதாகவும். உப்பு தண்ணீர் சப்பளை இரண்டு மணிநேரம் மட்டும் வருகிறது. இதனால் இந்த பகுதி மக்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று குடியிருப்பாளர்கள் பஞ்சாயத்து உறுப்பினர்களை சந்தித்து பலமுறை கோரிக்கைகள் வைத்தும் அரசாங்க அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தனர்.



உள்ளாட்சி தேர்தல்களில் தாமதம் காரணமாக இந்த  பகுதி மக்களின்  நிலைகளை கண்டுகொள்ள கவுன்சிலர் இல்லாததாலும், இதனால் அதிகாரிகளும் மக்கள் பிரச்சனைகளுக்கு முறையான பதில்களும் வழங்காததாலும் அதிருப்தியடைந்த அப்பகுதி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்குதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. அதிகாரிகள் தற்போது பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...