கோவை சுந்தராபுரம் அருகே பைக் டாக்ஸி டிரைவரை தாக்கிய நான்கு பேர் கைது

சுந்தராபுரம் காந்திநகரில் வாடகை கேட்ட பைக் டாக்ஸி டிரைவர் ரஞ்சித்தை அடித்து உதைத்து தாக்குதல் நடத்திய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை சுந்தராபுரம் வெங்கடாசலபதி நகரை சேர்ந்தவர் ரஞ்சித் (34). இவர் பைக் டாக்ஸி ஓட்டி வருகிறார். இவர் நேற்று ஜூன்.27 சுந்தராபுரம் கணேசபுரத்திற்கு சவாரி சென்றார். பின்னர் அங்கு சரண் (19) என்ற வாலிபரை இறக்கி விட்டுவிட்டு வாடகை பணம் கேட்டார். அதற்கு சரண், தனது நண்பர்கள் வந்து கொண்டுள்ளனர். அவர்கள் வந்தவுடன் பணம் தருகிறேன் என தெரிவித்துள்ளார்.

ஆனால் நீண்ட நேரமாக காத்திருந்தும் யாரும் வரவில்லை. பணமும் கொடுக்கவில்லை. இதனையடுத்து ரஞ்சித், சுந்தராபுரம் காந்தி நகரில் உள்ள சரண் வீட்டுக்கு சென்று பணம் தருமாறு கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்து தகாத வார்த்தைகளால் பேசி அடித்து உதைத்துள்ளார்.

மேலும் அங்கு வந்த சரணின் நண்பர்கள் சிலரும் ரஞ்சித்தை தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த ரஞ்சித் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.மேலும் தாக்குதலின் போது, அவரது பணம், வாட்ச் ஆகியவை காணாமல் போனது. இதுகுறித்து ரஞ்சித் சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், ரஞ்சித்தை தாக்கியது கூலி தொழிலாளி சரண், போத்தனூர் கணேசபுரத்தை சேர்ந்த சதீஷ் (21), போத்தனூரை சேர்ந்த ஸ்டாலின்(28) மற்றும் முல்லை நகரை சேர்ந்த பவித்ரன் (21) என்பது தெரியவந்தது. பின் போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...