ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் 72-வது நிறுவனர் தின விழா கொண்டாடப்பட்டது

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம். மருத்துவமனை தனது 72-வது நிறுவனர் தினத்தை கொண்டாடியது. இந்த விழாவில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.




கோவை, ஜூன் 29, 2024: ஜி.கே.என்.எம். மருத்துவமனை தனது 72வது நிறுவனர் தினத்தை, உன்னத நோக்கத்திற்காக தொலைநோக்கு சிந்தனையுடன் தங்களை அர்ப்பணித்த நிறுவனர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இத்தினத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறது. கோவையில் கடந்த எழுபது வருடங்களுக்கும் மேலாக மருத்துவ சேவை அளிப்பதில் நம்பிக்கை, நோய்களை குணப்படுத்துதல் மற்றும் மருத்துவ ரீதியான முன்னேற்றம் ஆகியவற்றுக்கு கலங்கரை விளக்கமாக ஜி.கே.என்.எம் மருத்துவமனை உயர்ந்து நிற்கிறது.

ஜி.கே.என்.எம். மருத்துவமனை 1952 ஆம் ஆண்டு 50 படுக்கைகள் கொண்ட தாய் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையாக நிறுவப்பட்டது. மேலும் 650 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக வளர்ந்துள்ளது. சமீபத்தில் 30 மருத்துவ துறைகள் மற்றும் 200 மருத்துவர்களை உள்ளடக்கிய 3.3 லட்சம் சதுர அடியில் புதிய ஒருங்கிணைந்த வெளிநோயாளிகள் மருத்துவ மையம் திறக்கப்பட்டது. இது நாட்டிலேயே முதல் முறையாகும்.

நோயாளிகளுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதுதான் ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முக்கிய நோக்கமாகும். அதிநவீன மருத்துவ உபகரணங்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுவதால் ஒவ்வொரு நோயாளிக்கும் விரைவான, துல்லியமான நோய் கண்டறிதல் மற்றும் உகந்த கவனிப்பு ஆகியன உறுதி செய்யப்படுகிறது. ஜி.கே.என்.எம். மருத்துவமனை ரோபோ-உதவியுடன் கூடிய அறுவை சிகிச்சைக்கு டா வின்சி ரோபோடிக் அமைப்பு போன்ற அதிநவீன தொழில்நுட்பத்தை நிறுவியுள்ளது.

தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களையும் உள்ளடக்கிய தீவிர சிகிச்சைப் பிரிவுகள், மேம்பட்ட அறுவை சிகிச்சை அரங்குகள், 24 மணி நேரமும் அர்ப்பணிக்கப்பட்ட இளைஞோர் மற்றும் குழந்தைகளுக்கான அவசரநிலை சிகிச்சை வசதிகள், நவீன ஆய்வுக்கூடம் மற்றும் இமேஜிங் வசதிகள் உள்ளன. கோயம்புத்தூர் மக்களுக்கு எங்களது மருத்துவ சேவைகளை ஒரு பிரதியேக குழுவுடன் நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று வழங்குகிறோம். மேலும் வீரபாண்டியில் கிராமப்புற சேவைகளை வழங்குதன் மூலமாக ஜி.கே.என்.எம். மருத்துவமனை அதன் வளாகத்திற்கு அப்பாலும் தன் சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.









ஜி.கே.என்.எம். தனது 72வது நிறுவனர் தினத்தை கொண்டாடும் வேளையில், 29 ஜூன் 2024 அன்று மாலை 5.30 மணிக்கு மணி மேல்நிலைப் பள்ளியின் நானி பல்கீவாலா ஆடிட்டோரியத்தில், நிறுவனர்கள் மற்றும் அவர்களின் நீடித்த பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையிலும், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் தன்னலமற்ற சேவைகளை அங்கீகரித்து கௌரவிக்கும் வகையிலும் விழா நடைபெற்றது. சிறப்புமிக்க சேவை விருதுகள், செவல்தீரன் சிறப்பு விருதுகள் மற்றும் மெரிட்டோரியஸ் சர்வீஸ் விருதுகளை வழங்குவதன் மூலம் மருத்துவமனை பெருமிதம் கொள்கிறது.

ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அலுவலர் டாக்டர்.ரகுபதி வேணுசாமி அனைவரையும் வரவேற்றார். இந்த விருது வழங்கும் விழாவில் குப்புசாமி நாயுடு அறக்கட்டளையின் தலைவர் திரு.எஸ்.பதி மற்றும் துணைத் தலைவர் திரு.ஆர்.கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர்.மனோகரன் நன்றியுரையாற்றினார்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...