வெள்ளலூர் குளத்தில் மூன்றாவது வாரமாக தூர்வாரும் பணியில் ஈடுபட்ட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்

கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் கோவையில் தன்னார்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டதே கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு.

இக்குழுவினர் வார இறுதிநாளான ஒவ்வொரு ஞாயிறன்றும் நீர்நிலைகளில் களப்பணியில் ஈடுபட்டு தூர்வாரி வருகின்றனர். அதன்படி கடந்த இரு வாரங்களாக வெள்ளலூர் குளத்தில் களப்பணியில் ஈடுபட்டு சீமைக்கருவேள மரங்களை அகற்றினர். தொடர்ந்து, கடந்த வாரம் ஆத்துப்பாளம் அருகே வெள்ளலூர் தடுப்பணையில் உள்ள சாக்கடை கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணி நடைபெற்றது. இதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இணைந்து லாரிகள் மூலம் குப்பைக் கழிவுகளை அகற்றினர்.



தொடர்ந்து, இந்த வாரம் தூர்வாரும் பணியாக இன்றும் வெள்ளலூர் குளத்தில் தூர்வாரும் பணி நடைபெற்றது. இதுகுறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆர்.வி.மணிகண்டன் கூறுகையில், கோவையில் வரலாற்று சிறப்புமிக்க குளங்களில் ஒன்று வெள்ளலூர் குளம். இக்குளத்தினை சமீபகாலமாக சரிவர பராமரிக்காததால் தற்போது பயனற்று கிடக்கிறது. மேலும், தொழிற்சாலைக் கழிவுகள், குடியிருப்புக் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்களால் வெள்ளலூர் குளம் சிதலமடைந்துள்ளது.

இதனை கடந்த இரு வாரங்கள் தூர்வாரி சீமைக்கருவேல மரம், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினோம். தொடர்ந்து, இன்று மூன்றாவது வாரமாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் ஒன்றிணைந்து ஏராளமான கழிவுப் பொருட்களை அகற்றியுள்ளோம். மேலும், இக்குளத்திற்கு நீர் வரும் வாய்க்கால்கள் முழுவதும் கழிவுப் பொருட்களால் அடைபட்டுள்ளது. அதனையும் தூர்வாரி சுத்தம் செய்தோம்.



தொடர்ந்து, கோவையில் சிதலமற்றுள்ள குளங்கள், நீர்நிலைகளில் தூர்வாரும் பணி நடைபெறும். இதனால், வரும் மழைக்காலத்தில் நீர் முழுவதுமாக சேமிக்கப்படும்.

மேலும், பொதுமக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை நீர்நிலைகளில் கொட்டுவதை நிறுத்தினால் மட்டுமே முழுமையாக நீர்நிலைகளை பாதுகாக்க முடியும்' என்றார்.



இன்று நடைபெற்ற வெள்ளலூர் குளம் தூர்வாரும் பணியில் அப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் என 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.



Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...