உலக ஹீமோஃபீலியா தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு பேரணி

உலக ஹீமோஃபீலியா தினத்தை முன்னிட்டு, ஹீமோஃபீலியா என்பது நோய் அல்ல குறைபாடே என்று விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் கோவையில் இன்று ஊர்வலம் நடைபெற்றது.



கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், கோவை ஹீமோஃபீலியா சொசைடியும் இணைந்து, ஹீமோஃபீலியா எனப்படும் இரத்தம் உறையும் தன்மை குறைபாடு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, "பிறக்கும் 6 ஆயிரம் ஆண் குழந்தைகளில் ஒருவருக்கு ஹீமோஃபீலியா பாதிப்பு ஏற்படக் கூடும். உறவு முறையில் திருமணம் செய்வதை தவிர்பது மூலம் ஹீமோஃபீலியாவை தவிர்க்க முடிவும். ஹீமோஃபீலியா என்பது நோய் அல்ல, அது குறையாடே என்று தெரிவிக்கப்பட்டது



மேலும், இந்த நோய் குறைபாடு உள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெறலாம். இந்த சிகிச்சைகான மருந்து 10,000 ரூபாய். அதை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். 



கோவை மாவட்டத்தில் ஹீமோஃபீலியா-வினால் 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, 6 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இந்த வகை பாத்கிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆரம்பத்திலேயே இதை கண்டறிந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்" என பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, இந்த பேரணி இரயில் நிலையம் வழியாக சென்று கோவை அரசு மருத்துவமனையில் முடிவடைந்தது.

Newsletter

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...