கோவையில் ஜூலை 10-ஆம் தேதி ஈ.எஸ்.ஐ.சி சுவிதா சமகம் கூட்டம்

ஊழியர் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) ஜூலை 10, 2024 அன்று கோவை துணை பிராந்திய அலுவலகத்தில் சுவிதா சமகம் கூட்டத்தை நடத்துகிறது. மருத்துவம் மற்றும் பண பலன்கள் தொடர்பான குறைகளை தீர்க்க அழைப்பு.


கோவை: ஊழியர் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) ஜூலை 10, 2024 அன்று மாலை 3 மணிக்கு கோவை துணை பிராந்திய அலுவலகத்தில் சுவிதா சமகம் கூட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

ESIC வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த காப்பீடு செய்யப்பட்ட நபர்கள், சார்ந்தவர்கள், முதலாளிகள் ஆகியோர் மருத்துவம் மற்றும் பண பலன்கள் தொடர்பான எந்தவொரு குறைகளையும் கொண்டிருந்தால், அவற்றை விரைவாக தீர்க்க இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன்கிழமை அன்று கோவை ESIC துணை பிராந்திய அலுவலகத்திலும், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று அந்தந்த கிளை அலுவலகங்களிலும் சுவிதா சமகம் நடத்தப்படுகிறது. விடுமுறை நாளாக இருந்தால், அடுத்த வேலை நாளில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விளக்கங்கள் அல்லது குறைகளுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ, CPGRAMS இணையதளம் வழியாகவோ அல்லது 0422-2362329 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...