கோவையில் தனிமையில் வசிக்கும் பெண்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல்துறை தனிமையில் வசிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கியுள்ளது. அறிமுகமில்லாத நபர்களுடன் பழகுவதில் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.


கோவை: கோவை மாநகர காவல்துறை சார்பில் தனிமையில் வசிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு குறித்த முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அண்மையில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், கோவையில் வசதி படைத்த தனிமையில் இருக்கும் பெண்களை இலக்காக வைத்து, அவர்களிடம் நட்பு பாராட்டி பணம் மற்றும் பொருட்களை மிரட்டி பெறும் சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, தனிமையில் வசிக்கும் பெண்கள் தங்களது சமூக வாழ்க்கையில் கவனமாக இருக்குமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, அறிமுகமில்லாத அல்லது முன்பின் தெரியாத நபர்களுடன் பழக்கம் மற்றும் நட்பு ஏற்படுத்திக் கொள்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தொடர்பு எண் அல்லது வாட்ஸ்அப் எண் போன்ற தனிப்பட்ட தகவல்களை அறிமுகமில்லாத நபர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், உடனடியாக கோவை மாநகர காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரசுரங்கள் தயாரிக்கப்பட்டு, நகரின் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. மாநகர காவல்துறையின் முகநூல் பக்கத்தில் மகளிர் பாதுகாப்பிற்கான QR குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. இதனை கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து, அவசர காலங்களில் பயன்படுத்தி காவல்துறை உதவியை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல் எல்லைக்குள் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மூத்த குடிமக்கள் தொடர்பு அலுவலர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...