கோவை மாமன்ற சிறப்புக் கூட்டத்தில் மேயர் கல்பனாவின் ராஜினாமா கடிதம் ஏற்பு

கோவை மாநகராட்சி சிறப்புக் கூட்டத்தில் மேயர் கல்பனாவின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. கூட்டத்தில் தி.மு.க, அ.தி.மு.க கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டம் 9 நிமிடங்களில் முடிவடைந்தது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் மாமன்ற சிறப்புக் கூட்டம் இன்று (ஜூலை 8) நடைபெற்றது. இக்கூட்டம் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் தலைமையிலும், மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தின் போது, மேயர் எந்த காரணத்திற்காக ராஜினாமா செய்தார் என்று அ.தி.மு.க கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் இரு கட்சிகளின் கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் மேயராக இருந்த செ.ம.வேலுசாமி ராஜினாமா செய்தபோது தாங்கள் கேள்வி எழுப்பவில்லை என துணை மேயர் வெற்றிச்செல்வன் சுட்டிக்காட்டினார்.



தொடர்ந்து, மேயர் கல்பனாவின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. இந்த சிறப்புக் கூட்டம் வெறும் 9 நிமிடங்களிலேயே முடிவடைந்தது.

இந்நிகழ்வில் துணை ஆணையாளர்கள் மரு.ச.செல்வசுரபி, க.சிவகுமார், மண்டல குழுத்தலைவர்கள் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக் (கிழக்கு), கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை (மேற்கு), வே.கதிர்வேல் (வடக்கு), ர.தனலட்சுமி (தெற்கு), மீனா லோகு (மத்தியம்), மாலதி நாகராஜ் (கல்வி & பூங்கா) ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், நிலைக்குழுத் தலைவர்களான தீபா தளபதிஇளங்கோ (கணக்குகள்), சாந்தி முருகன் (பணிகள்), வி.பி.முபசீரா (வரிவிதிப்பு & நிதி), சோமு (எ) சந்தோஷ் (நகரமைப்பு), பெ.மாரிசெல்வன் (பொது சுகாதாரம்) உட்பட நிலைக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...