பொள்ளாச்சி அருகே ஆழியார் சோதனை சாவடியில் ஃபாஸ்ட் டேக் வசதி அறிமுகம்: சுற்றுலா பயணிகள் வரவேற்பு

பொள்ளாச்சி அருகே ஆழியார் சோதனை சாவடியில் ஃபாஸ்ட் டேக் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகன நெரிசல் குறைந்து, சுற்றுலா பயணிகள் நேரம் மிச்சமாகிறது. சுற்றுலா பயணிகள் இந்த முடிவை வரவேற்றுள்ளனர்.



கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆழியார், கவி அருவி, ஆழியார் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. மேலும், வால்பாறை செல்வதற்கு இந்தப் பாதையே பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. வனத்தின் நடுவே செல்லும் இந்த பாதையில் அவ்வப்போது வனவிலங்குகள் தென்படுவதும் உண்டு.

குளுமையான சூழலை ரசிக்கவும், சுற்றுலாவை மகிழ்ச்சியாக கொண்டாடவும் வெளி ஊர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். குறிப்பாக விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆழியார் சோதனை சாவடியில் ஃபாஸ்ட் டேக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



இதன் மூலம் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஃபாஸ்ட் டேக் வசதி அறிமுகம் செய்யப்பட்டதால், சுற்றுலா பயணிகளின் நேரம் மிச்சமாவதோடு, போக்குவரத்து நெரிசலும் பெருமளவு குறைந்துள்ளது. இந்த புதிய முன்னெடுப்புக்கு சுற்றுலா பயணிகள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது அப்பகுதியில் சுற்றுலாத்துறையை மேலும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...