கோவை டாடாபாத்தில் மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்: 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம்

கோவை டாடாபாத் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்தில் மின் ஊழியர்கள் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர். காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.


கோவை: கோவை டாடாபாத் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்தில் மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.



20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலம் முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டத்தை அறிவித்துள்ளது.



இன்று (ஜூலை 9) நடைபெற்ற இப்போராட்டத்தில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தமிழக அரசையும் மின்சார வாரியத்தையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.



தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோவை மாநகரத் தலைவர் மதுசூதனன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மின்சார வாரியத்தின் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் கடுமையான வேலைப்பளுவுடனும் மன உளைச்சலுடனும் கீழ் மட்ட பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இதனால் தொடர் விபத்துகளும் மரணங்களும் ஏற்பட்டு வருகின்றன," என்றார்.

மேலும் அவர், "பலமுறை எண்ணற்ற போராட்டங்கள் நடத்தியும் இந்த அரசு செவி மடுக்காத காரணத்தால் தான் தமிழகம் முழுவதும் அலுவலகத்திற்குள்ளேயே காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். இந்த போராட்டத்திற்கு அரசு தீர்வு காணவில்லை என்றால் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நோக்கி செல்லும்," என்று எச்சரித்தார்.

மின்சார வாரிய தலைவர், அமைச்சர்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையாளருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், கோரிக்கைகளுக்கு ஏற்புடைய பதில் கிடைக்கவில்லை என்றும் மதுசூதனன் தெரிவித்தார். இதனால் சமரச முறிவு ஏற்பட்டு போராட்டக் களத்தில் இறங்க நேர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...