புதிய குற்றவியல் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து பொள்ளாச்சியில் வழக்கறிஞர்கள் மறியல் போராட்டம்

பொள்ளாச்சியில் மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து வழக்கறிஞர்கள் அஞ்சல் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்தினர். மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி, சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.


Coimbatore: மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் வழக்கறிஞர்கள் பழைய வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையம் வழியாக பேரணியாக வந்தனர்.

பின்னர் உடுமலை சாலையில் உள்ள தலைமை அஞ்சல் துறை அலுவலகம் முன்பு மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். அப்போது திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



வழக்கறிஞர்கள் சங்க துணை தலைவர் உதயகுமார் கூறுகையில், "மத்திய அரசின் இந்த புதிய சட்ட திருத்த மசோதாவால் வழக்கறிஞர்கள் மட்டுமல்லாது பொது மக்களும் பாதிக்கப்படுவார்கள். பொதுமக்களை வழக்கறிஞர்களை அடக்கு முறையோடு கையாளும் இந்த புதிய சட்ட திருத்தம் காவல்துறை வருவாய்த் துறையோடு இணைந்து போராட்டங்களை ஒடுக்கும் வகையில் அமையும்" என்றார்.

மேலும் அவர், "பொதுமக்கள், வழக்கறிஞர்கள் நியாயங்களையும் நீதிமன்றங்களின் மாண்பையும் குறைக்கும் செயல் எனவே இந்த சட்டமன்ற திருத்த மசோதாவை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம். சமஸ்கிருதம், ஹிந்தியை திணிக்கின்ற இந்த முயற்சியை மத்திய அரசு கைவிடும் வரை போராட்டங்கள் வெடிக்கும்" என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...