தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதுநிலை நுழைவுத் தேர்வு ரத்து

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முதுநிலை நுழைவுத் தேர்வு சாஃப்ட்வேர் பிரச்சினை காரணமாக ரத்து செய்யப்பட்டது. 10 நாட்களுக்குள் புதிய தேதி அறிவிக்கப்படும் என துணைவேந்தர் தெரிவித்தார்.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் (TNAU) முதல் நிலை பட்ட மேற்படிப்பு நுழைவுத் தேர்வு, ஜூன் 23 அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களால் இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டதாக பல்கலைக்கழகம் அறிவித்தது.

இந்த நுழைவுத் தேர்வு ரத்து குறித்து இன்று காலை 10 மணிக்கு முழுமையான தகவல் தெரிவிக்கப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமியிடம் விளக்கம் கேட்டபோது, அவர் பின்வருமாறு கூறினார்:

"சாஃப்ட்வேர் பிரச்சினை மற்றும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களுக்குள் நுழைவுத் தேர்வு நடைபெறும் புதிய தேதி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்ட பிறகு, தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும்."

மேலும், இளநிலைப் படிப்புகள் செப்டம்பர் மாதம் முடிவடையும் நிலையில், முதுநிலைப் படிப்புகளுக்கான வகுப்புகள் செப்டம்பர் இறுதியிலேயே தொடங்கும் என்றும் துணைவேந்தர் கூறினார். மாணவர் சேர்க்கையில் எந்தவித தாமதமும் ஏற்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்த திடீர் ரத்து அறிவிப்பு, தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், தொழில்நுட்பப் பிரச்சினைகளைச் சரி செய்து, விரைவில் தேர்வு நடத்தப்படும் என்ற நம்பிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...