கோவை கிராஸ்கட் சாலை டீக்கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: ராஜஸ்தான் நபர் கைது

கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள டீக்கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக காட்டூர் காவல்துறையினர் சோதனையில் கண்டறிந்தனர். இதையடுத்து ராஜஸ்தானை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவை காட்டூர் காவல்துறையினர் நேற்று (ஜூலை 9) காந்திபுரம், கிராஸ் கட் சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த டீக்கடை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பவருக்கு சொந்தமானது. சோதனையின் போது, மொத்தம் 77 கிலோ அளவிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, டீக்கடை உரிமையாளர் தினேஷ் குமார் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட தினேஷ் குமார் இன்று (ஜூலை 10) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...