கோவை 51வது வார்டில் திமுக இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கோவையின் 51வது வார்டில் திமுக இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் பல்வேறு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை மாநகரின் 51வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் திமுகவின் "இல்லம் தோறும் இளைஞர் அணி" உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று (ஜூலை 10) நடைபெற்றது. இந்த முகாம் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் M.K. ஸ்டாலின் அவர்களின் கரத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது.

திமுக கழக இளைஞரணிச் செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இது தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.



கோவை பீளமேடு பகுதி-3, வார்டு எண் 51, சவுரி பாளையம், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் இந்த முகாம் நடைபெற்றது. கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. கோவை மாநகர மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.தனபால், துணை அமைப்பாளர் க.மணிகண்டன் ஆகியோரின் மேற்பார்வையில் இந்த முகாம் நடத்தப்பட்டது.

பீளமேடு பகுதி-3 பகுதி செயலாளர் இரா.சேரலாதன் தலைமையிலும், 51வது வட்டக் கழகச் செயலாளர் க.மணிகண்டன் முன்னிலையிலும் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த முகாமில் மாநகர மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், மாநகர மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லாரா பிரேம்தேவ், பொதுக்குழு உறுப்பினர் நோயல் செல்வம், வட்டக் கழகச் செயலாளர் (வார்டு எண் 53) ம.சிவக்குமரன், கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சு.தனபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், இளைஞரணி கார்த்திக், மில் தண்டபாணி, நாகராஜ், ரங்கநாதன், மகேந்திரமணி, கே.சின்னச்சாமி, ராமதாஸ், சுபாஷ், சதீஷ்குமார், சுரேஷ், சேகர், பிரவீன், கணேசன், பிரகாஷ், பிரபு ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். பல்வேறு கழக நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகளும் இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...