கோவை அவிநாசி சாலை மேம்பால பணி: வாகன போக்குவரத்து பாதிப்பு குறித்து மாமன்ற உறுப்பினர் கோரிக்கை

கோவை வார்டு 26 மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, அவிநாசி சாலை மேம்பால பணியால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ஏறுதளத்தை மாற்றி அமைக்க கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி வார்டு எண் 26 மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, அவிநாசி சாலை மேம்பால பணியால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அவிநாசி சாலை மேம்பால பணியின் ஒரு பகுதியாக, VK ரோட்டில் இருந்து அவிநாசி சாலைக்கு செல்லும் ஏறுதளம் அமைக்கப்பட உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான வாகனங்கள், பாதசாரிகள், ஆட்டோக்கள், கார்கள், டாக்சிகள் மற்றும் கனரக வாகனங்கள் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று மாமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

தற்போது PSG TECH மேற்கு பகுதி விளாங்குறிச்சி சாலை - அவிநாசி ரோடு சந்திப்பில் 172வது தூண் அருகில், விளாங்குறிச்சி ரோட்டில் இருந்து வாகனங்கள் உள்ளே-வெளியே போக முடியாதபடி சாலை மறைக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன.

இதேபோன்ற சூழல் VK ரோட்டிலும் ஏற்படாமல் இருக்க, ஏறுதளத்தை உயர்த்தி அமைத்து, 100 மீட்டர் மேற்கு புறம் தள்ளி VK ரோட்டில் கனரக வாகனங்கள் செல்லும் அளவிற்கு சாலையை உயர்த்தி அமைக்க வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நேரடியாகவும், முதலமைச்சர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்கு பதிவுத் தபால் மூலமாகவும் அனுப்பி வைத்துள்ளதாக மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...