கோவையில் 278 பானிபூரி கடைகளில் அதிரடி ஆய்வு: 57 கடைகளுக்கு நோட்டீஸ்

கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை 278 பானிபூரி கடைகளில் ஆய்வு மேற்கொண்டது. 57 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, தரமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பானிபூரி தயாரிப்பு மற்றும் விற்பனைக்கான விதிமுறைகள் வலியுறுத்தப்பட்டன.


கோவை: கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கே.தமிழ்செல்வன் தலைமையில், உணவுப் பாதுகாப்புப் பிரிவு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் 10 குழுக்களாக பிரிக்கப்பட்டு கோவையில் இயங்கி வரும் பானிபூரி விற்பனைக் கடைகள் மற்றும் தயாரிக்கும் இடங்கள், துரித உணவு விற்பனை செய்யும் கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜூலை 10 அன்று ஆவாரம்பாளையத்தில் இயங்கி வரும் பானிபூரி தயாரிக்கும் இடம் மற்றும் விற்பனை இடங்களில் களஆய்வு நடத்தப்பட்டது. இதில் சுகாதாரமின்றி தயாரிக்கப்பட்ட 10,000 பானிபூரிகள், அழுகிய நிலையில் இருந்த 12 கிலோ உருளைக்கிழங்குகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.23,000 ஆகும். மேலும், பானிபூரி தயாரிக்க பயன்படுத்தப்படும் 5 மூலப்பொருட்கள் பகுப்பாய்வுக்காக எடுக்கப்பட்டுள்ளன.

உணவு பாதுகாப்புத்துறையினர் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, 278 கடைகள் ஆய்வு செய்யப்பட்டதில், 57 கடைகள் மற்றும் தயாரிப்பு இடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 15 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் உபயோகப்படுத்தியதற்காக 23 கடைகளுக்கு அபராதமாக ரூ.46,000 விதிக்கப்பட்டுள்ளது.

இந்த களஆய்வில் 223 சில்லறை விற்பனையாளர்கள், 9 தயாரிப்பு இடங்களில் அதிக கலர் நிறமி சேர்க்கப்பட்ட 98.5 லிட்டர் பானி, 62 கிலோ பூரி, தரமற்ற காளான் 34.5 கிலோ, 88.5 கிலோ உருளைக்கிழங்கு மசாலா, 12 கிலோ தரமற்ற உருளைக்கிழங்கு போன்ற உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிக செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்ட சில்லி சிக்கன், தரமற்ற நூடுல்ஸ், புரோட்டா என 55.45 கிலோ உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

உணவு பாதுகாப்புத்துறை பானிபூரி தயாரிக்கும் இடங்களில் உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. பணியாளர்கள் மேலங்கி, தலைக்கவசம், கையுறை அணிந்து பணிபுரிய வேண்டும். இடம் சுகாதாரமாக இருக்க வேண்டும். விற்பனை செய்பவர்களும் தலைக்கவசம், முகக்கவசம், மேலங்கி அணிந்து விற்க வேண்டும். பானிபூரி தயாரிக்க பயன்படுத்தும் தண்ணீர் சுகாதாரமாக, சுத்தமாக இருக்க வேண்டும். நீண்ட நாள் இருப்பு வைத்துள்ள நீரை பயன்படுத்தக்கூடாது. காய்கறிகள் தரமானதை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...