கோவையில் 22-வது சர்வதேச வேளாண் கண்காட்சி தொடக்கம்: 450க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைப்பு

கோவை கொடிசியா வளாகத்தில் 22-வது சர்வதேச வேளாண் கண்காட்சி ஜூலை 11 முதல் 15 வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. 450க்கும் மேற்பட்ட அரங்குகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.


கோவை: கோவை கொடிசியா தொழிற்கூட கண்காட்சி வளாகத்தில் 22-வது சர்வதேச வேளாண் கண்காட்சி இன்று (ஜூலை 11) தொடங்கியது. சர்வதேச அளவில் நடைபெறும் இந்த கண்காட்சி ஜூலை 15 வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.

வழக்கமாக 4 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி, இந்த ஆண்டு 5 நாட்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



இதில் 450க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, வேளாண் மற்றும் விவசாய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



இந்த கண்காட்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண் நிறுவனங்கள் மட்டுமல்லாமல், மலேசியா, சிங்கப்பூர், சைனா, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன.



கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த நாட்டு மாடுகளும், வெளிநாட்டு வகை ஆடுகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



மேலும், பல்வேறு விதைகள், இயற்கை குளிரூட்டிகள் ஆகியவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.



தோட்டக்கலை சார்பில் நர்சரிகளும் அமைக்கப்பட்டு, பல்வேறு ரக செடிகள், பூச்செடிகள் ஆகியவற்றின் விற்பனையும் நடைபெறுகிறது. இந்த கண்காட்சி விவசாயிகள், வேளாண் தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்களுக்கு பயனுள்ள தகவல்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...