தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புகளுக்கான இணையவழி கலந்தாய்வு தொடக்கம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புகளுக்கான இணையவழி கலந்தாய்வு ஜூலை 12 முதல் 14 வரை நடைபெறுகிறது. 2024-25 கல்வியாண்டுக்கு 2813 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.



கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று (ஜூலை 12) முதல் இணையவழி கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வு ஜூலை 14 மாலை 5 மணி வரை தொடரும்.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல் பட்டப் படிப்புகளுக்கு 2024-25 ஆம் கல்வியாண்டுக்கு மொத்தம் 2813 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கலந்தாய்வு தொடர்பான விரிவான தகவல், தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கலந்தாய்வின்போது விண்ணப்பதாரர்கள் எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பின்போது விண்ணப்பதாரர்களிடம் இருந்து கட்டணம் பெறப்படும். சேர்க்கை பெற்ற மாணவர்கள் மட்டும் சேர்க்கையை உறுதி செய்யும்போது இணையதளம் மூலம் ரூ.5,000 மட்டும் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் தங்களுடைய தரவுகளை வைத்து உள்ளே நுழைந்து தங்களின் கல்லூரி, பாட விருப்பங்களை மாற்றிக்கொள்ளலாம். கடைசியாக உறுதி செய்யப்பட்ட விருப்பமே இட ஒதுக்கீட்டுக்கு பரிசீலிக்கப்படும்.

கலந்தாய்விற்கான வழிமுறைகளை http://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு 94886-35077, 94864-25076 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...