அலுமினியக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்யும் ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி

தொழிற்கூடங்களின் பயன்பாட்டிற்காக ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறை, அலுமினியக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்கிறது. இந்த ஆராய்ச்சிப் பணிக்கு டிஎஸ்டி (அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை) என்னும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம், டிஎஸ்டி (தொழில்நுட்ப புத்துருவாக்க திட்டம்) திட்டத்தின் கீழ் அனுமதியும் ரூ.1 கோடியே 18 லட்சம் நிதியுதவியும் வழங்கியுள்ளது. 

இந்த நிதித்தொகை, மேற்சொல்லப்பட்ட ஆராய்ச்சிப் பணிக்காகச் செலவிடப்படுகிறது. சிஎஸ்ஐஆர் (அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்) – என்ஐஐஎஸ்டி, திருவனந்தபுரம் என்ற ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

ஆராய்ச்சிப் பணியின் முக்கிய அம்சங்கள்:-

  1. அலுமினியக் கழிவுகளை உருக்குவதற்கும் சுத்தப்படுத்துவதற்கும் வேண்டிய உபகரணங்களை அமைத்தல்.
  2. அலுமினியம் மற்றும் ஏனைய தனிமங்களின் அளவு விகிதம் குறித்த பரிசோதனை.
  3. அலுமினிய உலோகக் கலவையை மறுசுழற்சி செய்வதில் அறிந்து கொள்ளவிருக்கும் தொழில்நுட்பத் தகவல்கள்.


இந்தப் பணியின் ஆரம்ப நிலையாக தரமான அலுமினியத்திற்காக, தனிமத்தைச் சுத்தப்படுத்துதல், உலரவைத்தல் மற்றும் பொறுத்தமான ஊக்கிகளைக் கலக்குதல் என்னும் வரிசை முறையை முன்வைக்கிறது.

 

தொழிற்கூட அடிப்படை உபகரணங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. எஸ்என்ஆர் சன்ஸ் சாரிடபிள் டிரஸ்டி முதன்மை செயல் அலுவலர் ராமகிருஷ்ணா, ரூட்ஸ் குழுமத்தின் சேர்மன் கே.இராமசாமி ஆகியோர் முன்னிலையில் இந்த அலுமினிய மறுசுழற்சி மையம் துவக்கப்பட்டது.

 



இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர் பேசும் போது, இன்றைய கால சூழ்நிலையில் அடிப்படை மற்றும் அறிவு சார்ந்த ஆராய்ச்சி மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது. இவை அனைத்தும் சிறு தொழில்கள் துவங்குவதற்கும் மாணவர்களின் எதிர்கால ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பிற்கும் உறுதுணையாக இருக்கும்.

இதற்கு சரியான ஊக்குவிப்பும், சரியான பயிற்சியும் தேவையானதாக கருதப்படுகிறது. சிறிது காலமே தேவைப்பட்டாலும், பொறியாளர்கள் ஆராய்ச்சி மூலக்கூறுகளை கண்டறிந்து நிபுணத்துவம் பெற்று புதிய கண்டுபிடிப்பினை உலகிற்கு படைக்க வேண்டும்" என்று கூறினார்.

 

இவ்விழாவில் கொடிசியா தலைவர் வி.சுந்தரம், கொடிசியா துணைத்தலைவர் வி.திருஞானம், ரூட்ஸ் காஸ்ட் லிட் இயக்குநர் ஓ.ஏ.பாலசுப்ரமணியம், கொடிசியா முன்னாள் தலைவர் தேவராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் கல்வி இயக்குநர் எ.எபினேசர் ஜெயக்குமார் அணிந்துரை வழங்கினார். பேராசிரியரும் துறைத் தலைவருமான பி.கருப்புசாமி ஆராய்ச்சிப் பணியை விளக்கிப் பேசினார். இறுதியாக கல்லூரி முதல்வர் என்.எ.அலமேலு நன்றியுரை வழங்கினார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...