கோவை: வீட்டில் 62 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - மூவர் கைது

கோவை சின்னவேடம்பட்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 62 கிலோ புகையிலை பொருட்கள் சரவணம்பட்டி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: கோவை மாவட்டம் உடையாம்பாளையம் ரோடு சின்னவேடம்பட்டி பாரதி தெருவில் உள்ள ஒரு வீட்டில் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சரவணம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஜூலை 12 அன்று சரவணம்பட்டி போலீசார் குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையின் போது, விமல், ஹான்ஸ், கணேஷ் போன்ற பிராண்டுகளின் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மூன்று நபர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் சின்னவேடம்பட்டி சுப்பிரமணியம் நகரைச் சேர்ந்த மணிகண்டன் (45), கணபதி ராஜீவ் காந்தி ரோட்டைச் சேர்ந்த பாலாஜி (35) மற்றும் கணபதி மூகாம்பிகை நகரைச் சேர்ந்த ராம்குமார் (32) ஆகியோர் ஆவர்.

போலீசார் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து மொத்தம் 62 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...