பொள்ளாச்சி ஆழியார் கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்

பொள்ளாச்சி அருகே ஆழியார் கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். வனத்துறை அருவியில் குளிக்க தற்காலிக தடை விதித்துள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள ஆழியார் கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அருவியில் குளிப்பதற்கு தற்காலிக தடை விதித்துள்ளனர்.

விடுமுறை நாட்களில் ஆழியார் கவியருவிக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.



இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலை 7:00 மணி முதலே சுற்றுலா பயணிகள் கவியருவிக்கு வந்து குவிந்தனர். வனத்துறை அதிகாரிகளும் வழக்கம் போல சுற்றுலா பயணிகளை அருவியில் குளிக்க அனுமதித்தனர்.



எனினும், சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த போது, காலை 9 மணி அளவில் திடீரென கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியிலிருந்து அதிக அளவில் நீர் கொட்டத் தொடங்கியதை அடுத்து, வனத்துறையினர் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்களை அவசரமாக வெளியேற்றினர்.



இதனைத் தொடர்ந்து, அருவியில் நீர்வரத்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் ஆழியார் கவியருவியை தற்காலிகமாக மூடியுள்ளனர். இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் திரும்பிச் செல்கின்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...