மாநகராட்சி பணிகள் குறித்து கிழக்கு மண்டல பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், 62-வது வார்டுக்குட்பட்ட சிங்காநல்லூர், தனபால் லே-அவுட் பகுதியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், மாநகராட்சி பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 



இதனைத் தொர்ந்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தினை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றும் பணியினையும், தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியினையும் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.



தொடர்ந்து, தனபால் லே ஆவுட் பகுதியில் பொது மக்கள் பயன்படுத்தி வரும் பிரதான குடிநீர் குழாயில் நீர்கசிவு ஏற்பட்டுள்ளதை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர், உடனடியாக அதனை சரிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



பின், என்.ஜி.ராமசாமி லே அவுட் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். 



இந்நிகழ்வுகளின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமார், மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...