பொள்ளாச்சி அருகே நல்லூர் அரசு தொடக்கப்பள்ளி சீரழிவு: மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி

பொள்ளாச்சி அருகே நல்லூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியின் மேற்கூரை ஓடுகள் உடைந்து, பராமரிப்பின்றி உள்ளது. மழைக்காலத்தில் பள்ளிக்குள் நீர் தேங்குவதால் மாணவர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளி மோசமான நிலையில் உள்ளது. இந்த பழமையான பள்ளியில் தற்போது 29 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆனால், பள்ளியின் மேற்கூரை ஓடுகள் உடைந்தும், சுவர்கள் பலவீனமாகவும் காணப்படுகின்றன.

கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, உடைந்த மேற்கூரை வழியாக மழைநீர் பள்ளிக்குள் ஊடுருவி தேங்கி நிற்கிறது. மேலும், பலவீனமான சுவர்களில் மழைநீர் ஊடுருவுவதால் மின்கசிவு ஏற்படும் அபாயமும் உள்ளது.



இந்த அவலநிலையை சரிசெய்ய கோரி பெற்றோர்கள் பலமுறை கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

பள்ளி கட்டடம் பராமரிப்பின்றி இருப்பதால், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமாக இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர். பள்ளியை விரைவாக சீரமைத்து, மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலில் தரமான கல்வி வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பள்ளியின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...