தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, 2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார். ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்கள் 2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் வளர்ச்சிக்காக பணியாற்றி வரும் ஆர்வலர்களை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு தமிழ் ஆர்வலரைத் தேர்வு செய்து இந்த விருதை வழங்கி வருகிறது.

இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ.25,000/- ரொக்கப்பரிசும் தகுதியுரையும் வழங்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் https://tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

1. தன்விவரக் குறிப்புகள்

2. வட்டாட்சியர் வழங்கும் குடியிருப்புச் சான்று அல்லது ஆதார் அட்டை நகல்

3. வெளியிடப்பட்ட நூல்கள், கட்டுரைகள் பற்றிய விவரங்கள் (பட்டியலோடு ஒவ்வொன்றிலும் ஒரு படி இணைக்க வேண்டும்)

4. தமிழ்ச்சங்கங்கள், தமிழ் அமைப்புகளில் பொறுப்பு அல்லது உறுப்பினர் விவரம்

5. விருதுக்குத் தகுதியாகக் குறிப்பிடத்தகு பணிகள்

6. தமிழறிஞர்கள் இருவரின் பரிந்துரைக் கடிதம்

7. மாவட்டத்தில் செயற்படும் தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம்

8. இரண்டு கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம்

9. ஆற்றிய தமிழ்ப்பணிகளுக்கானச் சான்றுகள்

விண்ணப்பங்களை கோயம்புத்தூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு 0422-2300718 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துணைஇயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...