கோவை: நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - ஆபத்தை உணராமல் மீன் பிடிக்கும் இளைஞர்கள்

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆபத்தை உணராமல் இளைஞர்கள் சிலர் ஆற்றில் இறங்கி மீன் பிடித்து வருகின்றனர்.


கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அடிவார பகுதிகளில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து, நொய்யலாற்றிலும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



குறிப்பாக நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி மற்றும் கோவை ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை மற்றும் அதன் அணைகட்டு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்பரித்து விநாடிக்கு 400 கன அடி நீர் வெளியேறி வருகிறது.



இந்நிலையில் சில இளைஞர்கள், வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், ஆபத்தை உணராமல், ஆற்றில் இறங்கி 'செல்பி' எடுப்பது, குளிப்பது, மீன்பிடிப்பதுமாக இருப்பதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதுபோன்ற அபாயகரமான செயல்களைத் தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும், அசம்பாவிதங்களைத் தவிர்க்க இதுபோன்ற இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...