கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நாளை முதல் கடன் மேளா: பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்படும்

கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ஜூலை 18 முதல் 30 வரை கடன் மேளா நடைபெறுகிறது. கல்வி, வீட்டு உபயோக பொருட்கள், வாகனம், தொழில்முனைவோர் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்படும்.


கோவை: கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நாளை (ஜூலை 18) முதல் 30ம் தேதி வரை கடன் மேளா நடைபெற உள்ளது.

இந்த கடன் மேளாவில் கல்வி கடன், வீட்டு உபயோக பொருட்கள் கடன், மூத்த குடிமக்களுக்கு மறு அடமான கடன், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன கடன், கலைஞரின் கனவு இல்ல கடன், வீட்டு வசதி கடன், சிறு, குறு தொழில்முனைவோர் கடன், மகளிர் தொழில்முனைவோர் கடன் ஆகியவை வழங்கப்பட உள்ளன.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 39 கிளைகளில் இந்த கடன் மேளா நடைபெறும். இதில் வைப்பு நிதி சேகரித்தல் மற்றும் கடன் வழங்கும் முகாம்களும் நடத்தப்படும். வைப்பு நிதிகளுக்கு அதிகபட்சமாக 8.10 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

மேற்கூறிய கடன்களுடன், கைம்பெண் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான கடன், நாட்டுப்புற கலைஞர்களுக்கு கடன், காலி மனை வாங்க கடன் உள்ளிட்ட கடன்களும் வழங்கப்படும். டாம்கோ, டாப்செட்கோ, தாட்கோ மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு காரணங்களுக்கும் கடன்கள் வழங்கப்படுகிறது.

கடன் மேளாவின் தேதிகள் மற்றும் இடங்கள் பின்வருமாறு:

- ஜூலை 18: அன்னூர், போத்தனூர், ஆனைமலை

- ஜூலை 19: திருப்பூர், அவினாசி, மதுக்கரை, தொண்டாமுத்தூர்

- ஜூலை 20: ஆர்.எஸ்.புரம், அனுப்பர்பாளையம், ஒண்டிபுதூர், நெகமம்

- ஜூலை 22: மடத்துக்குளம், நல்லூர், பெரியநாயக்கன்பாளையம், பேரூர்

- ஜூலை 23: கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு, கிருஷ்ணாபுரம், கோவில்பாளையம்

- ஜூலை 24: பாப்பநாயக்கன்புதூர், பாப்பம்பட்டி, இடையர்பாளையம், கொங்கு மெயின்ரோடு

- ஜூலை 25: கோட்டூர், மேட்டுப்பாளையம், குறிச்சி

- ஜூலை 26: பல்லடம், பொள்ளாச்சி, காந்திமாநகர்

- ஜூலை 29: பெதப்பம்பட்டி, சோமனூர், கணபதி

- ஜூலை 30: சுல்தான்பேட்டை, சிங்காநல்லூர், சூலூர், ராமநாதபுரம், உடுமலைப்பேட்டை, டாக்டர் நஞ்சப்பா ரோடு

மகளிர் உரிமை தொகை பெறும் மகளிர் பயனாளிகளுக்கு தொடர் வைப்பு நிதிக்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மேலும், 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் உயர் கல்வி படிப்பதற்கு அரசு வழங்கும் உதவித்தொகை பெற வசதியாக புதுமைப்பெண் மற்றும் தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்கு தொடங்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...