கோவையில் மாபெரும் உணவுத் திருவிழா மற்றும் திருமண கண்காட்சி நவம்பர் 30, டிசம்பர் 1 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது

கோயமுத்தூர் விழாவின் போது, தமிழ்நாடு கேட்டர்ஸ் அசோசியேஷன் சார்பில் மாபெரும் உணவுத் திருவிழா மற்றும் திருமண கண்காட்சி நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 400க்கும் மேற்பட்ட உணவு வகைகள், 1000க்கும் மேற்பட்ட கேட்டர்ஸ் பங்கேற்கின்றனர்.


கோவை: கோயமுத்தூர் விழாவின் போது தமிழ்நாடு கேட்டர்ஸ் அசோசியேஷன் சார்பில் மாபெரும் உணவுத் திருவிழா மற்றும் திருமண கண்காட்சி 2024 நடைபெற உள்ளது. இதற்கான அறிமுக நிகழ்ச்சி ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.



இந்நிகழ்வில் தமிழ்நாடு கேட்டர்ஸ் அசோசியேஷன் உறுப்பினர்கள், கோயமுத்தூர் விழா ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் ஹிந்துஸ்தான் கல்விக் குழும உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த அறிமுக விழாவில் உணவுத் திருவிழா மற்றும் திருமண கண்காட்சி 2024க்கான லோகோ வெளியிடப்பட்டது.



நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்த உணவுத் திருவிழா மற்றும் திருமண கண்காட்சியில், 400க்கும் மேற்பட்ட உணவு வகைகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேட்டர்ஸ், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் வல்லுநர்கள் மற்றும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

தமிழ்நாடு கேட்டர்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளர் தயாளன் கூறியதாவது: "தமிழகத்தில் மட்டும் 450-ல் இருந்து 500 கேட்டர்ஸ் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இணைந்து, இந்த உணவுத் திருவிழாவை நடத்த உள்ளனர். நாளொன்றுக்கு 25000 வீதம் இரண்டு நாட்களுக்கு மொத்தம் 50 ஆயிரம் பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ளும்படி திட்டமிட்டுள்ளோம். இந்நிகழ்வானது இரண்டு நாட்களும் மாலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெறும்."

அவர் மேலும் கூறுகையில், "நிகழ்வு நடைபெறும் நாட்களில், பல்வேறு சிறப்பு விருந்தினர்கள், மற்றும் சினிமா பிரபலங்களை அழைத்து வர திட்டமிட்டுள்ளோம். மேலும் உணவுப் போட்டிகளும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. நிகழ்வில் கலந்துகொள்ள பெரியவர்களுக்கு 800 ரூபாயும் குழந்தைகளுக்கு 500 ரூபாயும் கட்டணமாக நிர்ணயத்துள்ளோம். இணைய வழியில் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளும்படி திட்டமிட்டுள்ளோம்."

உணவு வகைகள் குறித்து அவர், "தென்னிந்திய உணவு, வட இந்திய உணவு, சைனீஸ், மேலைநாட்டு உணவு என சைவம், அசைவம் சேர்த்து 350 இலிருந்து 400 வகையான உணவுப் பொருட்களை ஏற்பாடு செய்யவுள்ளோம். பஃபே முறையில் உணவு பரிமாறப்பட உள்ளது. மண்குவளைகள், மரத்தாலான ஸ்பூன்கள், பேப்பர் தட்டுகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க உள்ளோம்" என்றார்.

திருமண கண்காட்சி பற்றி கூறுகையில், "ஜூவல்லர்ஸ், டெக்கரேட்டர்ஸ், போட்டோகிராபி, டெக்ஸ்டைல் உள்ளிட்ட திருமணம் சார்ந்த அனைத்து துறையினரும் கலந்து கொள்ள உள்ளனர்" என்று தெரிவித்தார்.

கோயமுத்தூர் விழாவை மேலும் மெருகூட்டும் விதமாக இந்த உணவுத் திருவிழாவையும் திருமண கண்காட்சியையும் நடத்த உள்ளதாகவும், கின்னஸ் உலக சாதனைக்கும் முயற்சி செய்ய இருப்பதாகவும் கேட்டர்ஸ் அசோசியேஷன் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...