பூரண மதுவிலக்கு கோரி குன்னூரில் பாஜக-வினர் ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் வி.பி.தெருவில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டி ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க-வின் குன்னூர் நகரத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ஈஸ்வரன், மாநில பொருளாதார பிரிவு செயலாளர் எஸ்.எஸ்.வி.கிருஷ்ணக்குமார், நகர பொதுச் செயலாளர் சுந்தர் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்க்குழு உறுப்பினர் ஹேன்குமார் வரவேற்புரை வழங்கினார். 



இதனைத்தொடர்ந்து, கடந்த வாரம் திருப்பூரில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணை தாக்கியதைக் கண்டித்தும், திருப்பூர் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

Newsletter

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...