கோவை கொடிசியா வளாகத்தில் 8வது ஆண்டு கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் 8வது ஆண்டு கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா ஜூலை 19 அன்று தொடங்கியது. ஜூலை 28 வரை நடைபெறும் இந்த விழாவில் 100க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.


கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா அமைப்பு இணைந்து நடத்தும் '8வது ஆண்டு கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா'வின் துவக்க விழா ஜூலை 19 மாலை நடைபெற்றது.



கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், கொடிசியா அமைப்பின் தலைவர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட நூலகத்துறை அதிகாரிகள் புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டனர்.



ஜூலை 19 முதல் ஜூலை 28 வரை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.



மேலும் 285 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.



இந்த புத்தகத் திருவிழாவில் தினம்தோறும் பல்வேறு இலக்கிய கலை நிகழ்ச்சிகள், விருது வழங்கும் நிகழ்வுகள், இலக்கியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கோவை மாவட்ட நூலக துறை மற்றும் கொடிசியா நிர்வாகம் இணைந்து நடத்தும் இப்புத்தக திருவிழாவில் பொதுமக்கள் பார்வையிட அனுமதி இலவசமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...