கோவையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் - பிஆர்ஜி அருண்குமார் எம்எல்ஏ அறிவிப்பு

கோவையில் ஜூலை 23 அன்று திமுக அரசின் மின் கட்டண உயர்வு மற்றும் நியாய விலை கடை பொருட்கள் குறைப்பை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக பிஆர்ஜி அருண்குமார் எம்எல்ஏ அறிவித்துள்ளார்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பிஆர்ஜி அருண்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்படி, திமுக அரசின் மூன்றாவது முறையான மின் கட்டண உயர்வை கண்டித்தும், நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டம் ஜூலை 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை புறநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழகம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித்தலைவி அம்மா பேரவை உள்ளிட்ட பல்வேறு அணிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அதிமுக இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப்பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை, வர்த்தக அணி மற்றும் தகவல் தொழில்நுட்பபிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள் என்று பிஆர்ஜி அருண்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகரம், பேரூராட்சி, ஊராட்சி, வார்டு, கிளை கழகம், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று அருண்குமார் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...