பொள்ளாச்சி அருகே கோழிப் பண்ணை இடிந்து விபத்து: ஒருவர் பலி, 4 பேர் காயம்

பொள்ளாச்சி அருகே கெங்கம்பாளையத்தில் கனமழை காரணமாக கோழிப் பண்ணை இடிந்து விழுந்தது. இதில் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி உயிரிழந்தார், மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கெங்கம்பாளையம் பகுதியில் கனமழை காரணமாக கோழிப் பண்ணை இடிந்து விழுந்த விபத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சி, வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இதன் காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள கெங்கம்பாளையம் பகுதியில் முருகானந்தம் என்பவர் நடத்தி வரும் கோழிப் பண்ணை இடிந்து விழுந்தது.



இந்த கோழிப் பண்ணையில் வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் வேலை செய்து வந்தனர். பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக கோழிப் பண்ணை சரிந்து விழுந்ததில், கோழிப் பண்ணையின் உரிமையாளர் முருகானந்தம் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.



இந்த விபத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த மெமதாசிங் (33) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.



படுகாயம் அடைந்த முருகானந்தம் (45), ரேவதி (40), ரவிசிங் (46), கொனாமிகா (20) ஆகிய நான்கு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இந்த சம்பவம் குறித்து கோட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...