கோவையில் 28வது தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு சுழற்கோப்பை விளையாட்டு போட்டிகள்

கோவையில் 28வது தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு சுழற்கோப்பை விளையாட்டு போட்டிகள் வரதராஜபுரம் தியாகி என்.ஜி.ஆர்.நினைவு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவையில் 28வது ஆண்டாக தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு சுழற்கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.



தியாகி என்.ஜி.இராமசாமி விளையாட்டு கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போட்டிகள், வரதராஜபுரம் தியாகி என்.ஜி.ஆர்.நினைவு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. துவக்க விழா பள்ளியின் தலைமையாசிரியர் சதாசிவன் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் தியாகி என்.ஜி.இராமசாமி விளையாட்டு கழகத்தின் தலைவர் அமிர்தராஜ், செயலர் விஜயகுமார் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்தனர். ஸ்டார் நர்சரி பிரைமரி பள்ளி தாளாளர் செந்தில் நாதன் முன்னிலை வகித்தார். சேரிபாளையம் அரசு பள்ளி உடற்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார்.



சிறப்பு விருந்தினர்களாக வெள்ளலூர் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தமிழ் செல்வன், ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லூரி உதவி பேராசிரியர் பாலசுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஹோப்ஸ் வாக்கர்ஸ் கிளப் செயலர் மௌனசாமி, எல் சி சி நிறுவனத்தின் பொது மேலாளர் காந்தி ராஜ் ஆகியோர் கொடியேற்றி போட்டிகளை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் கனகராஜ், கோகுலகிருஷ்ணன், சொக்கலிங்கம், தினேஷ் குமார், மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



போட்டிகளில் கோவை, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 80க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 2500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.



கூடைப்பந்து, கைப்பந்து, கோகோ, கபடி மற்றும் பூப்பந்து என ஐந்து வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. 14, 17, மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன.

பள்ளிக்கல்வி துறை சார்பாக நடைபெற உள்ள போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தயார் செய்யும் நிலையில் நடைபெற்ற இந்த போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...