பொள்ளாச்சியில் மூடப்பட்ட ரயில்வே கேட்டை மீண்டும் திறக்கக் கோரி MLA மனு

பொள்ளாச்சி வடுகபாளையம் பகுதியில் 100 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த ரயில்வே கேட்டை மீண்டும் திறக்க வேண்டும் என பொள்ளாச்சி MLA ஜெயராமன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.


Coimbatore: பொள்ளாச்சி வடுகபாளையம் செல்லகுமாரர் விஸ்தரிப்பு வீதியில் உள்ள இரயில்வே கேட்டை (LC.NO:123) மீண்டும் திறக்கக் கோரி பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

இந்த இரயில்வே கேட் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த பகுதியில் இருந்து பொள்ளாச்சி நகரத்திற்கும், கோவை ரோட்டிற்கும் செல்வதற்கு இந்த ஒரு வழித்தடம் மட்டுமே மிக அருகாமையில் இருந்தது. பாலக்காடு ரோட்டில் இருந்த மற்றொரு வழித்தடம் மேம்பாலம் கட்டியதற்குப் பிறகு அடைக்கப்பட்டுவிட்டது.



தற்போது இந்த இரயில்வே கேட் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளதால், அந்தப் பகுதி தீவு போல் ஆகிவிட்டதாக MLA ஜெயராமன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த ரயில்வே கேட்டிற்கு அருகாமையில் வாழும் சுமார் 4000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், வேலைக்குச் செல்பவர்கள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் 4 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

முன்பு 108 ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள் மற்றும் மினி பஸ் ஆகியவை இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தி வந்தன. மேலும் 1937ஆம் ஆண்டு முதல் இந்த கேட்டிற்கு அருகாமையில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பல ஆண்டுகளாகப் பயன்பட்ட வழித்தடத்தை பொதுமக்கள் எப்போதும் பயன்படுத்திக் கொள்ள LC.NO:123 இரயில்வே கேட்டை திறந்து தருமாறு பொதுமக்கள் சார்பாக மாவட்ட நிர்வாகத்திடம் MLA ஜெயராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...