கோவை தடாகம் ரோட்டில் வாகன சோதனையின் போது காவலர் மீது தாக்குதல்: இரண்டு பேர் மீது வழக்கு

கோவை தடாகம் ரோட்டில் வாகன சோதனையின் போது காவலர் மீது தாக்குதல் நடத்திய இரண்டு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து சாய்பாபா காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை தடாகம் ரோட்டில் வாகன சோதனையின் போது காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து சாய்பாபா காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை அருகே உள்ள தடாகம் ரோடு கோவில் மேடு நான்கு ரோடு சந்திப்பில் ஜூலை 21 இரவு சாய்பாபா காலனி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீஸ் ஏட்டு பூபாலன் உள்ளிட்ட போலீசார் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டிகளின் ஆவணங்களை சரிபார்த்தனர்.

இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களை போலீசார் நிறுத்தி ஆவணங்களைக் காட்டுமாறு கேட்டனர். இதனால் போலீசாருக்கும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் உக்கிரமடைந்த நிலையில், இருவரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி போலீஸ் ஏட்டு பூபாலனை தாக்கி தள்ளிவிட்டதாக தெரிகிறது. இதனால் அவர் சாலையில் விழுந்தார்.

இச்சம்பவம் குறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீஸ் ஏட்டு பூபாலனை தாக்கிய திண்டுக்கல் கோவாக்காப்பட்டியைச் சேர்ந்த நாகராஜன் (31) மற்றும் கரூர் அருகே உள்ள காளப்பட்டியைச் சேர்ந்த இளங்கோ (35) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விருவரும் கட்டிட தொழிலாளிகள் என தெரியவந்துள்ளது.

சாய்பாபா காலனி போலீசார் இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...