மத்திய பட்ஜெட் சிறப்பானது - கோவை இந்திய தொழில் கூட்டமைப்பு வரவேற்பு

கோவையில் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) செய்தியாளர் சந்திப்பில், மத்திய பட்ஜெட் குறித்த கருத்துக்களை பகிர்ந்தனர். இரும்பு, காப்பர் கழிவுகள் மற்றும் தங்கம் மீதான வரி குறைப்பு உள்ளிட்ட அம்சங்களை வரவேற்றனர்.


கோவை: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, கோவையில் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் CII கோவை மாவட்ட சேர்மன் ராதாகிருஷ்ணன் பேசினார்.



கோவையைப் பொறுத்தவரை, மத்திய பட்ஜெட்டில் இரும்பு கழிவுகளுக்கான (ferrous scrap) இறக்குமதி வரியை பூஜ்ஜியமாக்கியுள்ளது கோவை நிறுவனங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், காப்பர் கழிவுகளுக்கான (copper scrap) இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதால் காப்பர் கச்சா பொருட்களின் விலை குறையும் வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தங்கத்திற்கான சுங்கவரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது தங்க நகை உற்பத்தியாளர்களுக்கும் பயனர்களுக்கும் பயனளிக்கக் கூடியதாக அமைந்துள்ளதாக ராதாகிருஷ்ணன் கூறினார். உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக 11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறு, குறு நிறுவனங்களுக்கு இயந்திரங்கள் வாங்க உத்தரவாதம் இல்லாமல் கடன் வழங்கப்படும். முத்ரா கடன் தொகை 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இவை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்த பட்ஜெடாக மத்திய பட்ஜெட் அமைந்துள்ளதாக இந்திய தொழில் கூட்டமைப்பினர் பாராட்டினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...