உக்கடம் மீன் மார்க்கெட்டை அப்புறப்படுத்தி குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்: வானதி சீனிவாசன் எம்எல்ஏ கோரிக்கை

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டை அகற்றி, அந்த இடத்தை குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாநில நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவிடம் ஜூலை 23 அன்று, கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டை அப்புறப்படுத்தி அந்த இடத்தை குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்டம் உக்கடம் சி.எம்.சி காலனி பகுதியில் பல வருடங்களாக தூய்மை பணியாளர்கள் வசித்து வந்தனர். 2018ஆம் ஆண்டு, உக்கடம் மேம்பாலம் அமைக்க இடம் தேவைப்பட்டதால், சி.எம்.சி காலனி பகுதி மக்களிடம் அப்பகுதியில் செயல்பட்டு வந்த மீன் மார்க்கெட்டை அப்புறப்படுத்தி, 18 மாதங்களில் 520 வீடுகள் கட்டித்தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இதன்படி, அம்மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டு, கோவை புல்லுக்காடு பகுதியில் தற்காலிக குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், நான்கு ஆண்டுகள் கடந்தும், மீன் மார்க்கெட்டை அப்புறப்படுத்தாத காரணத்தால், அப்பகுதி மக்கள் வீடின்றி அவதியுறுகின்றனர்.

இந்நிலையில், வானதி சீனிவாசன் எம்எல்ஏ, "இவ்விஷயத்தில் தங்களது மேலான கவனம் கொண்டு, விரைந்து மீன் மார்க்கெட்டை அப்புறப்படுத்தி, குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...