கோவையில் பெயிண்டர் உயிரிழப்பு மற்றும் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை: இரு தனி சம்பவங்கள்

கோவையில் பெயிண்டிங் வேலையின் போது விபத்தில் சிக்கி ஒரு தொழிலாளி உயிரிழந்தார். மற்றொரு சம்பவத்தில், உடல்நலக் குறைவால் மன உளைச்சலில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டார்.


கோவை: கோவை மாநகரில் இரு வேறு சம்பவங்களில் ஒரு பெயிண்டர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல் சம்பவத்தில், கோவை புலியகுளம் சிறுகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் (49) என்ற பெயிண்டர், தனது மகன் சந்துரு (26) உடன் கடந்த 15 நாட்களாக குறிச்சி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். ஜூலை 22 அன்று, செல்வராஜ் ஏணியின் மீது ஏறி பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவர்கள் பரிசோதித்தபோது, செல்வராஜ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது தொடர்பாக, மகன் சந்துரு ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினர் விசாரணையில், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தொழிலாளியை பணிக்கு அமர்த்தியதாக, குறிச்சி அழகு நகரைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர் முகமது அமீர் (43) மற்றும் கட்டிட மேஸ்திரி சின்னப்பராஜ் (52) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டாவது சம்பவத்தில், கோவை கெம்பட்டி காலனியைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் (33) என்ற ஆட்டோ ஓட்டுநர், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். வாழ்க்கையில் விரக்தியடைந்த கிருஷ்ணராஜ், ஜூலை 22 அன்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து கடைவீதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...