கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் மாணவர் சேர்க்கை: மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 26ஆம் தேதி நடைபெறுகிறது. 1300 இடங்களுக்கான சரிபார்ப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 26ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வியாண்டு முதல் TNAU, தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU) மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் (AU) வேளாண்மைப் பிரிவுக்கு ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பொதுப்பிரிவு மற்றும் 7.5% இடஒதுக்கீட்டிற்கான இணையதளவழி கலந்தாய்வு ஜூன் 23 முதல் 26 வரை நடைபெற்றது.

TNAU-வில் பொதுக்கல்விப்பிரிவில் நகர்வு மேல் முறையில் ஏற்பட்ட காலியிடங்களுக்கு மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 26 அன்று மொத்தம் 1300 இடங்களுக்கு நடைபெறுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு தற்காலிக சேர்க்கை அவர்களின் தரவரிசை மதிப்பெண், விருப்பப்பாடம் மற்றும் சாதிய அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களான 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழுடன் TNAU வளாகத்திலுள்ள அண்ணா அரங்கத்தில் ஜூலை 26 அன்று நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும்.

இத்தகவல்கள் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அவர்கள் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் https://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 9488635077, 9486425076 என்ற அலைபேசி எண்களிலோ வாரநாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...