ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்: ரூ.13.99 லட்சத்திற்கு விற்பனை

ஆனைமலையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) நடைபெற்ற கொப்பரை ஏலத்தில், 432 மூட்டைகள் ரூ.13.99 லட்சத்திற்கு விற்பனையானது. முதல் தர கொப்பரை கிலோவிற்கு ரூ.92.59 வரை விலை பெற்றது.


கோவை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்தில் முதல் தரம் மற்றும் இரண்டாம் தரம் என இரு வகையான கொப்பரை மூட்டைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. முதல் தர கொப்பரையில் 162 மூட்டைகள் ஏலத்திற்கு வந்தன. இவை கிலோவிற்கு ரூ.87.69 முதல் ரூ.92.59 வரை விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரையில் 270 மூட்டைகள் ஏலத்திற்கு வந்தன. இவை கிலோவிற்கு ரூ.43.43 முதல் ரூ.81.21 வரை விலை பெற்றன.

இந்த ஏலத்தில் மொத்தம் 194.40 குவிண்டால் கொப்பரை விற்பனையானது. இதன் மொத்த மதிப்பு ரூ.13.996 லட்சம் ஆகும். இந்த தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...