காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32வது கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர். தண்ணீர் திறப்பு குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32வது கூட்டம் இன்று (24.07.2024) பிற்பகல் 2:30 மணிக்கு டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமை வகிக்கிறார்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இக்கூட்டத்தில் தண்ணீர் திறப்பு குறித்து தமிழக மற்றும் கர்நாடக அதிகாரிகள் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மதுரை மற்றும் பெங்களூரு உயர் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்தும் விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 99வது கூட்டத்தில், தமிழகத்திற்கு ஜூலை 12 முதல் 31 வரை தினமும் 1 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும், பிலிகுண்டுலுவில் 1 டி.எம்.சி நீர் வரத்தை கர்நாடக அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

தற்போது கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், தொடர்ந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்றைய கூட்டத்தில் தண்ணீர் பங்கீடு குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...