கோவை ஆவாரம்பாளையத்தில் பெண்ணிடம் 9 சவரன் தங்க நகைகள் பறிப்பு - போலீசார் விசாரணை

கோவை ஆவாரம்பாளையத்தில் வீட்டுக்குள் புகுந்த இரண்டு வாலிபர்கள் பெண்ணிடம் வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து 9 சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்றனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள இளங்கோ நகரில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்த இரண்டு வாலிபர்கள், பெண்ணிடம் வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து 9 சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் சின்ன Dharapuram பகுதியைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள இளங்கோ நகரில் தனது மகன் மற்றும் மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் தனது வீட்டு வேலைகளை கவனித்து வந்தபோது, ராஜலட்சுமியின் வீட்டுக்குள் புகுந்த இரண்டு அடையாளம் தெரியாத வாலிபர்கள் வீடு வாடகைக்கு இருக்கிறதா என்று கேட்டுள்ளனர்.

அதற்கு ராஜலட்சுமி இது தொடர்பாக வீட்டு உரிமையாளரிடம் தான் பேச வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் ராஜலட்சுமி அணிந்திருந்த ஏழு சவரன் தாலி மற்றும் இரண்டு சவரன் தங்க சங்கிலி என மொத்தம் ஒன்பது சவரன் தங்க நகைகளை பறித்தனர். தன்னிடம் நகை பறிக்கப்பட்டதாக ராஜலட்சுமி கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் இரண்டு வாலிபர்களும் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பினர்.

இது தொடர்பாக பீளமேடு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் வாலிபர்களை பிடிக்க தனிப்படை அமைத்துள்ள போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பட்டப் பகலில் நகையைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாலிபர்கள் இருவரும் தனியாக உள்ள பெண்ணின் வீட்டை நோட்டமிட்டு நகைப் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...