சூலூரில் ரூ.500 கோடி முதலீட்டில் புதிய மின்சார பைக் உற்பத்தி நிறுவனம் தொடக்கம்

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், சூலூரில் ரூ.500 கோடி முதலீட்டில் ஸ்ரீவரு என்ற மின்சார பைக் உற்பத்தி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் சூலூரில் ரூ.500 கோடி முதலீட்டில் புதிய மின்சார பைக் உற்பத்தி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவரு என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த மின்சார பைக் உற்பத்தி நிறுவனத்தை சிங்கப்பூர் தொழிலதிபர் ஆன்றுலியோ மற்றும் நிறுவனத்தின் இயக்குனர் செல்வராஜ் கிருஷ்ணன் ஆகியோர் ஜூலை 25 அன்று திறந்து வைத்தனர்.

இந்த நிறுவனம் உயர் செயல் திறன் கொண்ட மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மின்சார பைக்குகளை உருவாக்கும் என நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்தனர். இது தமிழகத்தில் மின்சார வாகனத் துறையின் வளர்ச்சிக்கு பெரும் உந்துதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் பேசிய தொழிலதிபர் ஆண்ட்ருலியோ, "தொழில் துவங்க உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. தமிழக முதல்வரின் அழைப்பை ஏற்று உலக தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் தமிழகத்தில் தொழில் துவங்க விரும்புகின்றனர். அந்த வகையில் ஸ்ரீவரு மோட்டார்ஸ் நிறுவனமும் தமிழகத்தில் தொழில் துவங்கியதில் மகிழ்ச்சி" என்று தெரிவித்தார்.

இந்த புதிய மின்சார பைக் உற்பத்தி நிறுவனம் தொடங்கப்பட்டதன் மூலம், சூலூர் பகுதியில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...