கோவையில் CCCA ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்: நிர்வாகிகளுக்கு அழைப்பு

கோவையில் CCCA ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் 2024-25ஆம் ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 1ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு ஹோட்டல் ரத்னா ரெசிடென்சியில் நடைபெற உள்ளது. நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியின் ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. CCCA ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் 2024 – 25ஆம் ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் ஹோட்டல் ரத்னா ரெசிடென்சியில் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டம் KCP Infra Limited நிறுவனத் தலைவரும், CCCA ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் செயலாளருமான K. சந்திரபிரகாஷ் தலைமையில் நடைபெறும். மேலும், CCCA ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் தலைவர் R. உதயகுமார், பொருளாளர் A. அம்மாசையப்பன், துணைத் தலைவர் V. ராஜகோபால், துணைச் செயலாளர் T. மைக்கேல், துணைப் பொருளாளர் R. செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள்.

இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கோவை PROPEL GROUP நிறுவனத்தின் JMD வெங்கடேஷ் அவர்கள் பங்கேற்க உள்ளார். அலுவலக பணியாளர்கள், நிர்வாக உறுப்பினர்கள், கமிட்டி உறுப்பினர்கள் உட்பட பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

CCCA சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு இந்தக் கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்குமாறு CCCA ஒப்பந்ததாரர் நலச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. மாலை 5.30 மணிக்கு தொடங்கும் கூட்டம் இரவு உணவுடன் நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...